எங்கள் நாட்டில் கொரோனாவே இல்லை.. உலக சுகாதார அமைப்பையே குழப்பிய வட கொரியா அரசு!!!

0

வட கொரியாவில் ஒருவருக்கு கூட கொரோனா நோய் தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை என அந்நாட்டு அரசு,  உலக சுகாதார அமைப்பிடம் (World Health Organization) தெரிவித்துள்ளது.

சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று 2020 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே உலக நாடுகள் அனைத்திருக்கும் பரவியது. முதல் அலையின் தாக்கத்தை விட இரண்டாம் அலையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது இந்த பெருந்தொற்று மனிதர்களை தாண்டி விலங்குகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவுடன் எல்லைப் பகிர்ந்துள்ள வட கொரியா எங்கள் நாட்டில் யாருக்கும் கொரோனா இல்லை எனவும் ஜூன் 10ம் தேதி வரை அறிகுறிகளுடன் இருந்த 30,000 க்கும் அதிகமானோர்களை சோதனை செய்ததாகவும், அதில் யாருக்கும் தொற்று கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் ஒரு அறிக்கையை உலக சுகாதார அமைப்பிடம் சமர்ப்பித்துள்ளது.

சீனாவுக்கு சம்மந்தம் இல்லாத மற்ற நாடுகளையே கொரோனா விட்டு வைக்காதபோது, சீனாவுடன் எல்லையை பகிர்ந்து, பொருளாதாரத் தேவைக்கும் சீனாவைச் நம்பியிருக்கும் வடகொரியாவில் எப்படி கொரோனா தொற்று இல்லாமல் போகும் என்று உலக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here