புலம்பெயர் தொழிலாளர்கள் சர்ச்சை எதிரொலி., ஆட்சியர் தலைமையில் தனிக்குழு! வெளியான அறிவிப்பு!!

0
புலம்பெயர் தொழிலாளர்கள் சர்ச்சை எதிரொலி., ஆட்சியர் தலைமையில் தனிக்குழு! வெளியான அறிவிப்பு!!
புலம்பெயர் தொழிலாளர்கள் சர்ச்சை எதிரொலி., ஆட்சியர் தலைமையில் தனிக்குழு! வெளியான அறிவிப்பு!!

வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது ஏற்படும் குறைகளை பதிவு செய்வதற்காக கூடுதல் ஆட்சியர் தலைமையில் தனிக்குழு ஒன்றை அமைப்பதாக கிருஷ்ணகிரி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஆட்சியர் அறிவிப்பு:

தமிழகத்தின் கட்டடம் மற்றும் பாலம் சார்ந்த கட்டுமான பணிகள், ஹோட்டல் வேலைகள் போன்ற பல்வேறு பணிகளில் வடமாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சமீப காலமாக இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன், பீகார் மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விளக்கம் அளித்த அரசு, இது குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது.

11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில் இவர்களுக்கு அனுமதியில்லை., தேர்வுகள் துறை திட்டவட்டம்!!

இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கூடுதல் ஆட்சியர் தலைமையில் புலம்பெயர் தொழிலாளர்களை பாதுகாக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் அவர்களின் ஊதியம், இருப்பிடம் மற்றும் உணவு என அனைத்திற்கும் நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். ஆட்சியரின் இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here