தமிழக பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் – பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

0
தமிழக பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் - பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
தமிழக பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் - பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
தமிழக பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் – பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

தமிழ்நாடு அமைச்சுப்பணி பள்ளிக்கல்வித்துறை 2020-2021 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை மானிய உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியரல்லாத பணியிடங்கள் தோற்றுவித்தல் தொடர்பாக, பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்:

தமிழகத்தில் பள்ளிக்‌ கல்வித்‌ துறையின்‌ கீழ்‌ இயங்கும்‌ அனைத்து அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ நிர்வாகம், அலுவலகம்‌ தொடர்பான பணிகளை மேற்கொள்வதற்குப்‌ போதுமான எண்ணிக்கையில்‌ ஆசிரியரல்லா பணியிடங்கள்‌ இருப்பதை உறுதி செய்வதற்கு, மாணவர்களின்‌ எண்ணிக்கையின்‌ அடிப்படையில்‌ உதவியாளர்‌ / இளநிலை உதவியாளர்‌ // பதிவறை எழுத்தர்‌ பணியிடங்களில்‌ பணியாளர் நிர்ணயம்‌ தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அரசாணையில்‌ தெரிவித்துள்ளவாறு பணியாளர்கள்‌ நிர்ணயம்‌ செய்வது குறித்து அனைத்து முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்குக்‌ விவரங்கள்‌ தெரிவிக்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பள்ளிவாரியாக உபரி எனக்‌ கண்டறியப்படும்‌ உதவியாளர்‌ / இளநிலை உதவியாளர்‌ / பதிவறை எழுத்தர்‌ பணியிடங்களில்‌ பணியாளர்கள்‌ பணிபுரிந்து வந்தால்‌, அப்பணியிடம்‌, பணியாளருடன்‌ உபரி என்பதால்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கையின்‌ அடிப்படையில்‌ தேவையுள்ள அருகாமையில்‌ உள்ள பள்ளிக்கு, அப்பள்ளியில்‌ கடைசியாகப்‌ பணியில்‌ சேர்ந்த இளையவரைப்‌ பணிநிரவல்‌ செய்யப்பட வேண்டும்‌.

அதே போன்று, உபரி எனக்‌ கண்டறியப்பட்டுள்ள உதவியாளர்‌ / இளநிலை உதவியாளர்‌ / பதிவறை எழுத்தர்‌ பணியிடங்கள்‌ காலியாக இருப்பின்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கையின்‌ அடிப்படையில்‌ அவற்றை அருகாமையில்‌ உள்ள தேவையுள்ள பள்ளிக்குப்‌ பணியிடத்தினைப்‌ பகிர்ந்து அளித்திடல்‌ வேண்டும்‌

மாவட்ட அளவில்‌ பணியாளருடன்‌ உபரி எனப்‌ பட்டியலிடப்பட்டவர்களை, மாவட்டத்திற்குள்‌ இணைப்பில்‌ குறிப்பிட்டுள்ளவாறு பணி நிரவல்‌ செய்த பிறகு, மாவட்டத்திற்குள்‌ பணி நிரவல்‌ செய்யத்‌ தேவை இல்லையெனில்‌ அப்பணியாளர்களின்‌ பெயர்ப்‌ பட்டியல்‌ இணை இயக்குநரின்‌ (பணியாளர்‌ தொகுதி) பெயரிட்ட முகவரிக்கு அனுப்பப்‌பட வேண்டும்.

அதுபோலவே மாவட்ட அளவில்‌ உபரி எனக்‌ கண்டறியும்‌ பணியிடங்களை தேவை உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட அளவில்‌ பகிர்ந்தளித்த பின்னர்‌, எஞ்சிய உபரிப்‌ பணியிடங்கள்‌ இருப்பின்‌, ஒப்பளிக்கப்பட்ட அரசாணை எண்‌ குறிப்பிட்டு அப்பணியிடங்களின்‌ பெயர்ப்‌ பட்டியலை இணை இயக்குநரின்‌ (பணியாளர்‌ தொகுதி) பெயரிட்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்‌.

ஒரு சில மாவட்டங்களில்‌ பணி நிரவல்‌ / உபரிப்‌ பணியிடங்களைப்‌ பகிர்ந்தளித்தல்‌ ஆகிய பணிகளை மேற்கொண்ட பின்னர்‌, மேலும்‌ கூடுதல்‌ தேவை இருப்பின்‌ அது குறித்த பள்ளிவாரியான பெயர்ப்‌ பட்டியல்‌ இணை இயக்குநரின்‌ (பணியாசர்‌ தொகுதி) பெயரிட்ட முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்‌.

மேற்படி பணியாளர்‌ நிர்ணயம்‌ சார்ந்த பள்ளி / அலுவலகத்தின்‌ அளவைப்‌ பதிவேட்டில்‌ உரிய பதிவுகளை அரசாணை எண்ணுடன்‌ பதிவுகள்‌ மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட வேண்டும்‌.

இப்பணியிடம்‌ பகிர்ந்தளித்தல்‌ தொடர்பான விவரங்களைக்‌ கூறித்த பதிவுகள்‌ கல்வித்‌ தகவல்‌ மேலாண்மை இணையதளத்தில்‌ மேற்கொள்ளப்பட வேண்டும்‌.

மேற்ரசூறிப்பிட்ட அறிவுரைகளின்‌ அடிப்படையில்‌ ஆசிரியரல்லாப்‌ பணியாளர்களின்‌ பணிநிரவல்‌ 7 உபரிப்‌ பணியிடங்களைப்‌ பகிர்ந்தளித்தல்‌ சார்பான பணிகளை மாவட்ட அளவில்‌ உடனடியாக மேற்கொண்டு, அதன்‌ பின்னர்‌ கீழ்க்குறிப்பிட்ட 5 இனங்கள்‌ தொடர்பான அறிக்கையினை அணுப்பி வைக்க அனைத்து
முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ தெரிவிக்கப்படுகிறது.

1. பணிநிரவல்‌ செய்யப்பட்ட பணியாளர்களின்‌ பெயர்‌ விவரப்‌ பட்டியல்‌ .

2. உபரிப்‌ பணியிடங்கள்‌ பகிர்ந்தளிக்கப்பட்ட பள்ளிகளின்‌ பெயர்‌ விவரப்‌ பட்டியல்‌.

3. மாவட்டத்திற்குள்‌ உபரிப்‌ பணியாளர்களைப்‌ பணிநிரவல்‌ செய்ய இயலாத நிலை இருப்பின்‌, அப்பணியாளர்களின்‌ பெயர்‌ விவரப்‌ பட்டியல்‌.

4. மாவட்டத்திற்குள்‌ உபரிப்‌ பணியிடங்கள்‌ பகிர்ந்தளிக்க இயலாத நிலை இருப்பின்‌, அப்பணியிடங்களின்‌ பெயர்‌ விவரப்‌ பட்டியல்‌.

5. மாவட்டத்திற்குள்‌ பணிநிரவல்‌ / பணியிடம்‌ பகிர்ந்தளிக்கப்பட்ட பின்னரும்‌ கூடுதல்‌ தேவையிருப்பின்‌, பணியிடம்‌ வாரியாகப்‌ பள்ளிகளின்‌ பெயர்‌ விவரப்‌பட்டியல்‌.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here