விளம்பரமா இருந்தாலும் நியாயம் வேண்டாமா..? பயணிகளை பயமுறுத்தும் கதாப்பாத்திரங்கள்!!

0
விளம்பரமா இருந்தாலும் நியாயம் வேண்டாமா..? பயணிகளை பயமுறுத்தும் கதாப்பாத்திரங்கள்!!
விளம்பரமா இருந்தாலும் நியாயம் வேண்டாமா..? பயணிகளை பயமுறுத்தும் கதாப்பாத்திரங்கள்!!

மெட்ரோ ரயிலில் திரைப்பட கதாப்பாத்திரங்களை போல வேடமணிந்து பயணிகளை பயமுறுத்திய சம்பவத்திற்கு நொய்டா ரயில்வே நிர்வாகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.

மெட்ரோ நிகழ்வு

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா நகரத்தில் மெட்ரோ ரயில் நிலையம் இயங்கி வருகிறது. இந்த ரயில்களில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பேர் பயணம் செய்து வருகின்றனர். இந்த பயணங்களின் போது, சிலர் சந்திரமுகி போன்ற தோற்றம் கொண்ட பூல் புலையா (Bool Bhulaiya) மற்றும் மனிகெய்ஸ்ட் (Money Heist) போன்ற சில திரைப்படங்களில் வரும் கதாப்பாத்திரங்களின் உடையணிந்து பயணிகளை பயமுறுத்தும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

நானே வருகிறேன்.., சிகிச்சைக்கு பின் நடிகர் விஜய் ஆண்டனி உருக்கம்!!

இந்த நிகழ்வு வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், நொய்டா மெட்ரோ ரயிலில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதாவது, மெட்ரோ ரயிலில் திரைப்பட கதாப்பாத்திரங்களை போல வேடமணிந்து மக்களை பயமுறுத்துவது போல வெளியான வீடியோ விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காணொளி விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டாலும் ஒரு நியாயம் வேண்டாமா என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here