Friday, March 29, 2024

இயற்பியலுக்கான இந்த வருடத்தின் நோபல் பரிசு – மூவருக்கு பகிர்ந்தளிக்க முடிவு!!

Must Read

இந்த வருடத்திற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மூவர் இந்த ஆண்டிற்கான பரிசுகளை பெறுகின்றனர். கருந்துளை பற்றிய ஆய்வுகளை நடத்தியதற்காக இந்த வருடம் இவர்களுக்கு வழங்கப்படுகிறது.

“உயரிய விருது”

நோபல் பரிசு ஆண்டுதோறும் வேதியல் ஆய்வாளர் நோபல் நினைவாக 5 துறைகளில் மகத்தான சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. நோபல் பரிசு 1895 ஆம் ஆண்டு முதல் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இயற்பியல், வேதியல், அமைதி, இலக்கியம் மற்றும் மருத்துவம் இந்த துறைகளில் மகத்தான சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த பரிசு பெறுபவர் 8 கோடி ரூபாய் ரொக்கமும், 24 கேரட் தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் சான்றிதழ் பெறுவார். ஆண்டுதோறும் தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் 10 ஆம் தேதி ஓசுலோவில் நார்வே நாட்டு மன்னர் முன்னணியில் விருதுகள் வழங்கப்படும்.

இயற்பியலுக்கான விருதுகள்:

நேற்று மருத்துவத்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விவரம் வெளியிடப்பட்டது. மூவர் அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமில் கமிட்டியின் தலைவர் தாமஸ் பெர்ல்மன் விருதுகளை பெறுபவர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறார். இந்த ஆண்டு இயற்பியல் துறைக்கும் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அனிதா சம்பத்துடன் சண்டை போடும் சுரேஷ் – கடுப்பில் ரசிகர்கள்!!

nobel prize winners 2020
nobel prize winners 2020

அவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ரோஜர் பென்ரோஸ், பிரிட்டனை சேர்ந்த ரிய்ன்ஹார்ட் கென்செல், அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்ட்ரியா கெஸ் ஆகிய மூவர் ஆவர். கருந்துளை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டதற்காகவும், விண்மீனின் மையத்தில் அதிசயத்தக்க பொருளை கண்டுபிடித்ததற்காகவும் பரிசுகள் இம்மூவருக்கும் வழங்கப்பட உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -