Saturday, April 20, 2024

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிப்பு – இருவருக்கு பகிர்ந்தளிக்க முடிவு!!

Must Read

உலகின் உயரிய விருதான “நோபல் பரிசுகள் 2020” ஒவ்வொரு துறைகளுக்கும் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டிற்கான 5 துறைகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது பொருளாதாரத்திற்கான விருதுகள் இருவருக்கு விருதுகள் பகிர்ந்தளிக்கப்பட உள்ளன.

நோபல் விருதுகள்:

ஆண்டுதோறும் நோபல் விருதுகள் வேதியியல் ஆய்வாளர் ஆல்பிரெட் நோபல் நினைவாக வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் 1895 ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகின்றது. இது குறிப்பிட்ட ஆறு துறைகளில் சிறந்து விளங்குபவர் அல்லது அந்த துறையில் மகத்தான சாதனை புரிந்தவருக்கு வழங்கப்படும். நோபல் விருது பெறுபவர் 8 கோடி ரூபாய் ரொக்கம், தங்க முலாம் பூசிய பதக்கம் மற்றும் ஒரு சான்றிதழை பெறுவார். இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், வேதியியல், இயற்பியல் மற்றும் அமைதி ஆகிய 6 துறைகளுக்கு வழங்கப்படும்.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

இந்த விருதுகள் ஸ்வீடன் நாட்டின் தலைநகரில் வழங்கப்படும். அமைதிக்கான விருது மட்டும் நார்வே தலைநகரில் வழங்கப்படும். இந்த ஆண்டிற்கான 5 துறைகளுக்கான விருதுகளை பெறுபவர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். மருத்துவ துறையில் மூன்று விஞ்ஞானிகளான ஹார்வே ஜே.ஆல்டர், மைக்கேல் ஹங்டன், சார்லஸ் எம்.ரைஸ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வேதியியல் துறையில் இரு பெண் ஆய்வாளர்களான ஜெனிபர் ஏ.டெளட்னா, இம்மானுவே சார்பென்டியர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பொருளாதாரத்திற்கான விருதுகள்:

இயற்பியல் துறையில் கருந்துளை ஆய்விற்காக ரோஜர் பென் ரோஸ், ரிய்ன்ஹார்ட் கென்செல், ஆண்ட்ரியா கெஸ் ஆகிய இருவரும் விருதுகளை பகிர்ந்தளிக்க உள்ளனர். இலக்கியத்திற்காக அமெரிக்க கவிஞர் லூயிஸ் பெற உள்ளார். அமைதிக்கான விருது இந்த ஆண்டு “உலக உணவு திட்டம்” அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில முதலமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!!

தற்போது, பொருளாதார துறைக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருவர் இந்த ஆண்டு பொருளாதார துறைக்கான நோபல் பரிசுகளை பகிர்ந்து கொள்ள உள்ளனர். பால்.ஆர்.மில்க் ரோம் மற்றும் ராபர்ட்.பி. வில்லசன் ஆகியோர் பெற உள்ளனர். ஏல கோட்பாட்டின் மேம்பாடு மற்றும் ஏல கோட்பாட்டின் புதிய வடிவமைப்புகளை உருவாக்கியதற்காக இந்த ஆண்டு பொருளாதாரத்திற்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -