அரசு ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்டால்தான் சம்பளம்..!! தடாலடி உத்தரவு!!!

0
Close-up medical syringe with a vaccine.

சத்தீஸ்கர் மாநிலம் கரேலா பெந்த்ரா மார்வாகி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் நலத்துறையின் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் அடுத்தமாதம் சம்பளம் தடைபடும் என்றும், எனவே ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என பழங்குடியினர் நலத்துறை உதவி ஆணையர் கே.எஸ்.மஸ்ராம் உத்தரவிட்டார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அரசு அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி நிலையங்களில் இலவசமாகவும்,  தனியார் மருத்துவமனைகளிலோ பரிசோதனை கூடங்களிலோ உரிய கட்டணம் செலுத்தி கொரோனா தடுப்பூசியை பெறலாம். அந்தந்த மாநிலங்களில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப அரசு அறிவித்துள்ள நிலையங்களிலும் தடுப்பூசி பெறலாம்.

கொரோனா தடுப்பூசி குறித்த தவறான செய்திகளால் தடுப்பூசி செலுத்த மக்கள் தயக்கம் காட்டினர். பின்னர் அரசு அளித்த விழிப்புணர்வுகளின் பலனால் மக்கள் தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்த தொடங்கினர். ஆனால் இன்னும் இந்தியாவின் சில பகுதிகளில் மக்கள் தடுப்பூசியை கண்டு பயந்த வண்ணமே உள்ளனர். உத்தர பிரதேசத்தில் தடுப்பூசிக்கு பயந்து கிராம மக்கள் ஆற்றில் குதித்த நிகழ்வே இதற்கு சாட்சி.

இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில பழங்குடியினர் நலத்துறை உதவி ஆணையர் கே.எஸ்.மஸ்ராம்,  கரேலா பெந்த்ரா மார்வாகியில் உள்ள பழங்குடியினர் நலத்துறை அலுவலகங்கள், துறைக்குட்பட்ட ஆசிரமங்கள், மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொண்டு, அதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும், இவ்வாறு தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால் அடுத்த மாத சம்பளம் தரப்பட மாட்டாது  என உத்தரவிட்டுள்ளார்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here