தமிழகத்தில் கடந்த சில வாரமாக மழை பெய்து மக்கள் குளிர்ச்சி அடைந்த நிலையில், இப்போது கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்து விட்டது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு கூட மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் தலைமைச் செயலாளர் இறையன்பு வெயிலின் தாக்கத்தை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதன் படி, பொதுமக்கள் முடிந்தவரை 12 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்லாமல் இருப்பது மிகவும் நல்லது. அதையும் மீறி அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே சென்றால் பருத்தி ஆடைகள், காலணிகள் அணிந்தும், குடை கொண்டு செல்லவும் அறிவுறுத்தியுள்ளனர்.
சினிமா வாய்ப்புக்காக இப்படி இறங்கிடீங்களே காவியா.., நாளுக்கு நாள் எல்லை மீறும் புகைப்படங்கள்!!
மேலும் இந்த கோடை நேரத்தில் உடலில் உள்ள நீர் சத்துக்கள் குறைந்து விடாமல் இருக்க அதிக தண்ணீர்,எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்கவும், பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைக்கும் உணவுகளை சாப்பிடவும் கூறியுள்ளனர். ஒருவேளை மயக்கம், தலைசுற்றல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.