2020 – 2021 கல்வியாண்டில் அனைவரும் தேர்ச்சி – சந்தோஷத்தில் பள்ளி மாணவ, மாணவிகள்!!!

0

2020 – 2021ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என பள்ளி கல்வித்துறை சற்று முன் அறிவித்தது.

Instagram  => Follow செய்ய கிளிக் பண்ணுங்க!!

2020 – 2021 கல்வியாண்டில் அனைவரும் தேர்ச்சி:

கொரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காலவரையறை இன்றி மூடப்பட்டன. தொடர்ந்து வைரஸ் வேகமாகப் பரவியதால் ‌2020- 21ஆம் கல்வி ஆண்டுக்காகக் கடந்த‌ ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இருப்பினும்2020-21 ஆம் கல்வியாண்டில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டு, கொரோனா நோய்த் தொற்று ஓரளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 19 ஆம் தேதி முதல், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆனால் கடந்த சில மாதங்களாக கொரோனா தாக்கம் அதிகமான நிலையில் மே 3 முதல் மே 24 வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது; இருந்தாலும் கொரோனா கட்டுக்குள் வராததால் ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு கிடையாது எனவும் தேர்வுகள் இன்றி அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்படும் எனவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here