மாதவிடாய் நேரத்தில் பெண் ஊழியர்களுக்கு விடுப்பு?? மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி முக்கிய அறிவிப்பு!!!

0
மாதவிடாய் நேரத்தில் பெண் ஊழியர்களுக்கு விடுப்பு?? மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி முக்கிய அறிவிப்பு!!!
மாதவிடாய் நேரத்தில் பெண் ஊழியர்களுக்கு விடுப்பு?? மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி முக்கிய அறிவிப்பு!!!

அரசு பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுப்பு வழங்குவது குறித்து மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்மிருதி இரானி

சர்வதேச நாடுகளில் உள்ள பெண்கள் பல்வேறு துறைகளில் கால் பதித்து சாதனை படைத்து வரும் நிலையில் அவர்களுக்கு பல சலுகைகளையும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இதையடுத்து இந்தியாவிலும் சில மாநிலங்களில் தனியார் வேலை பார்க்கும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் லோக்சபாவில் எம்.பி ரவிக்குமார், மாதவிடாய் விடுப்புக்கான விதிகளை மத்திய அரசு செயல்படுத்துகிறதா?? என கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐபிஎல்லிருந்து விலக இருக்கும் CSK & LSG வீரர்கள்…, வெளியான நியூ அப்டேட்!!

இதற்கு தற்போது பதிலளித்துள்ள மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஏற்கனவே பெண்களுக்கு “அசாதாரண விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, மாற்றியமைக்கப்பட்ட விடுப்பு, மகப்பேறு விடுப்பு, மருத்துவச் சான்றிதல் விடுப்பு, நிலுவையில்லாத விடுப்பு போன்ற பல்வேறு விடுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் தற்போது வரை மாதவிடாய் விடுப்பு வழங்குவது குறித்து எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை. மேலும் நாடாளுமன்றத்தில் இதற்கு யாரும் முன்மொழியவில்லை. இதனால் அரசுத் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை” என பதிலளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here