வைகாசி மாத பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை – சபரிமலை நிர்வாகம் அறிவிப்பு!!!

0

கேரளா மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற உள்ள வைகாசி மாத பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா அச்சம்:

கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் உச்ச நிலையை அடைந்துள்ளது. நாட்டிலேயே அதிகம் கொரோனா தொற்று பாதித்த மாநிலங்களின் பட்டியலில் கேரளா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த அங்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தொற்று பரவல் அதிகரித்த நிலையிலேயே இருந்தது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்திலும் கொரோனா தடுப்பூசி – மருத்துவத்துறை அமைச்சர் தகவல்!!

இதனால் இன்று முதல் 16ம் தேதி வரை கேரளா மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வைகாசி மாத பூஜைகள் நடக்க உள்ளது. கடந்த மாதம் வரை ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு தினமும் 5000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு இருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது மாநிலம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்ட்டுள்ளதால், இன்று முதல் 16ம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் சபரிமலை கோவில் நடை 14ம் தேதி திறந்து 19ம் தேதி வரை பூஜைகள் நடக்கும் நிலையில், பக்தர்கள் யாரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here