வெளிநாட்டு பயணிகள் விசா கட்டணம் செலுத்த தேவையில்லை – மத்திய அரசு அதிரடி….!!!!

0
வெளிநாட்டு பயணிகள் விசா கட்டணம் செலுத்த தேவையில்லை - மத்திய அரசு அதிரடி….!!!!
வெளிநாட்டு பயணிகள் விசா கட்டணம் செலுத்த தேவையில்லை - மத்திய அரசு அதிரடி….!!!!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகிறது. முதல் அலையை காட்டிலும் இரண்டாம் அலை ஏகப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம். இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளும் கொரோனா பரவல் மற்றும் அதனை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.அரசு எடுத்த துரித நடவடிக்கையால், மே மாதம் 4 லட்சமாக இருந்த தினசரி தொற்று தற்போது 50,000 கீழ் குறைத்துள்ளது. இதனால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொருளாதார இழப்பு குறித்து நிருபர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 8 பொருளாதார நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளார்.

வெளிநாட்டு பயணிகள் விசா கட்டணம் செலுத்த தேவையில்லை - மத்திய அரசு அதிரடி….!!!!
வெளிநாட்டு பயணிகள் விசா கட்டணம் செலுத்த தேவையில்லை – மத்திய அரசு அதிரடி….!!!!

கொரோனாவால் பாதித்த துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. சுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடியும், பிற துறைகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடியும் கடன் உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. மருத்துவமனைகள் உள்ளிட்ட கூட்டமைப்பு வசதிகளை அமைக்க ரூ.100 கோடி வரை கடன் வழங்கப்படும். 7.95 சதவிகிதம் வட்டியில் கடன் வசதி 3 ஆண்டுகளுக்கு அளிக்கப்படும். பிற துறைகளுக்கு கடனுக்கு வட்டி 8.25 சதவிகிதமாக இருக்கும்.இதில் அதிகம் பாதிக்கப்பட்டதாக கருதப்படும், சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில், 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் அவர், சுற்றுலா ஏஜென்சிகளுக்கு 10 லட்சமும், சுற்றுலா கைடுகளுக்கு ஒரு லட்சம் கடனாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here