தமிழக கோவில்களில் இனிமேல் இதற்கு கட்டணம் கிடையாது – அறநிலையத்துறையின் புதிய அறிவிப்பு!!

0

தமிழக சட்டசபையில் இன்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு புதிதாக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதில் முக்கியமாக அனைத்து கோயில்களிலும் மொட்டை அடிக்க இனி கட்டணம் இல்லை என்றும், மாற்றுத்திறனாளியாக இருந்தால் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்பு:

இன்று தமிழக சட்ட பேரவை கூட்டடத்தில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சில முக்கியமான அறிவிப்புகளை அதில் வெளியிட்டார். அந்த அறிவிப்புகள் மக்களிடையே வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அந்த அறிவிப்பின் படி தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு கோவிலிலும் இனி மொட்டை அடிக்க கட்டணம் இல்லை எனவும், யானைகளுக்கு மாதம் இருமுறை மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் திருமணத்திற்கான கட்டணம் மாற்றுத்திறனாளியாக இருந்தால் வசூலிக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

திட்டங்களின் முழு விவரங்கள் பின்வருமாறு:

  • தமிழ்நாட்டில் எந்த கோவில்களில் இனி முடி காணிக்கைக்கு இனி கட்டணமில்லை.
  • மொட்டை அடிப்பதற்கான கட்டணத்தை அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு திருக்கோயில் நிர்வாகமே வழக்கும்.
  • மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் கோயில்களில் திருமணம் நடத்த கட்டணம் இல்லை.
  • கோவில் யானைகளுக்கு மாதம் இருமுறை மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here