வட்டி விகிதத்தில் மாற்றமில்லை… ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவிப்பு!!!

0

வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்து உள்ளார். மேலும் ரெப்போ ரேட் வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்திலும் எந்தவித மாற்றமும் இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

வட்டி விகித மாற்றத்தை தீர்மானிப்பது நடைபெறும் நிதிக்கொள்கை குழு கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் இல்லை என்று முடிவு செய்து உள்ளதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் எனவும் அதுபோல ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் மாற்றம் இல்லாமல் 3.35 சதவீதம் என்ற அளவில் தொடரும் என்பதால் வங்கிகளுக்கான விகிதத்தில் மாற்றமின்றி இருக்கும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.

ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் வட்டி விகிதம் ரெப்போ ரேட் ஆகும். எனவே ரெப்போ ரேட் குறையும்போது வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் குறையும்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here