தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை – அமைச்சர் செங்கோட்டையன்..!

0
online class example
online class example

ஊரடங்கு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மார்ச் மாதம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வந்தன. எனவே தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் தனது பேட்டிக்கு மறுப்பு தெரிவித்து புதிய விளக்கத்தை அளித்துள்ளார்.

ஆன்லைன் வகுப்புகள்

கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளித்ததோடு 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் தன பள்ளி கல்லூரிகள் திறக்க வாய்ப்புள்ளன.

தனியார் பள்ளிகள் ஜூன் மாதம் முதல் இணையவழி வகுப்புகளை நடத்த திட்டமிட்டிருந்தது. ஒரு சில தனியார் பள்ளிகள் ஏற்கெனவே இணையவழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இது குறித்து செய்தியாளரிடம் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கக் கூடாது. அவ்வாறு இணையவழி மூலம் பாடங்கள் எடுக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன்

அதேபோல், பொதுமுடக்கத்தின் போது கல்விக் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளிகள் திறப்பது, சுழற்சி முறையில் வகுப்புகள் உள்ளிட்டவை குறித்து குழு தரும் அறிக்கையை வைத்து முடிவெடுக்கப்படும் என்றார்”

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மூலம் ...

எனவே ஆன்லைனில் வகுப்பு நடத்தக் கூடாது என்று தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியதற்கு அனைத்து பள்ளிகள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது என்று பேட்டி அளித்த அமைச்சர் செங்கோட்டையன், உடனே மறுப்பு தெரிவித்தார்.

மறுப்பு

ஜனவரி 16ம் தேதி பள்ளிகளுக்கு ...

இது தொடர்பாக புது விளக்கம் ஒன்றை தொலைபேசி வாயிலாக செய்தியாளர்களுக்கு கூறியதாவது,
“ஆன்லைன் வகுப்பு எடுப்பதை நாம் தடுக்க முடியாது. மத்திய அரசு அதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தனியார் பள்ளிகள் மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வகுப்புகளை நடத்தக் கூடாது. தனிப்பட்ட முறையில் ஆன்லைன் வழியில் வகுப்புகளை நடத்துவதை நாம் தடுக்க முடியாது” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here