தகுந்த காரணம் இன்றி கைது செய்யக்கூடாது – டிஜிபி சுற்றறிக்கை!!

0

தமிழகத்தில் தகுந்த காரணம் இன்றி 7 அல்லது அதற்கு குறைவான சிறை தண்டனை உள்ள குற்றங்களில் கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். சில மாதங்களாக விசாரணை கைதிகள் இறப்பு சம்பவங்கள் அதிகரித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

விசாரணை மரணங்கள்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக கடையை திறந்து வைத்திருந்த காரணத்திற்காக கைது செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் நடத்திய கடுமையான தாக்குதலில் மரணம் அடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஊர் மக்கள் போராட்டம் மற்றும் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலைக்கு காரணமான போலீசார் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்தில் உள்ளனர். மேலும் இந்த சம்பவம் நடைபெற்ற சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஏற்கனவே பலர் விசாரணை என்கிற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Jeyaraj & Penniks
Jeyaraj & Penniks

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தென்காசி மாவட்டத்தில் வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட முத்து என்கிற விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு சிபிசிஐடி விசாரணை கோரி போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் இவ்வாறு தொடர்ந்து விசாரணை மரணங்கள் அதிகரித்து வருவதால் டிஜிபி திரிபாதி ஒரு உத்தரவினை பிறப்பித்து உள்ளார்.

இந்தியா முழுவதும் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – ‘அன்லாக் 3.0’ தளர்வு விதிமுறைகள் இதோ!!

Police
Police

அதன்படி தமிழகம் முழுவதும் 7 அல்லது அதற்கு குறைவான சிறை தண்டனை உள்ள குற்றங்களுக்கு தகுந்த காரணம் இன்றி கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது என அனைத்து மாவட்ட எஸ்.பி.க்கள், காவல் ஆணையர்களுக்கு டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். குற்றவியல் நடுவர் தகுந்த காரணம் இன்றி கைது நடவடிக்கைக்கு அனுமதி அளித்தால் அவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here