தேனி மாவட்டம் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு சுருளி, கும்பக்கரை போன்ற அருவிகளுக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது கும்பக்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது தற்போது தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதன் காரணமாக கும்பக்கரை அறிவிக்கும் நீர்வரத்து அதிகரித்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் குளித்து நீராடி மகிழ்ந்தனர். இந்நிலையில் தற்போது நீர்வரத்து அதிகரித்ததால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் யாரும் இங்கே மறு அறிவிப்பு வரும் வரை வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
தமிழகத்தில் இந்த முக்கிய பகுதிகளில் நாளை போக்குவரத்து மாற்றம்., வெளியான திடீர் அறிவிப்பு!!!