கண்ணா.. இது எப்படி இருக்கு… சூப்பர் ஸ்டார் போல் மாறிய நிவேதா தாமஸ்!!!

0

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நிவேதா தாமஸ். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களை போல் போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு உள்ளார்.

தமிழ் சீரியல் மற்றும் படங்களில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஒரு கதாநாயகியாக உயர்ந்தவர் நடிகை நிவேதா தாமஸ். இவருக்கு முதல் திரை அனுபவமாக அமைந்த படம் மலையாள மொழியில் வெளியான உத்தரா என்ற படம் தான். அதில் இவர் உத்தரா என்ற குழந்தை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதன் பிறகு தமிழ் மற்றும் மலையாள படங்களில் மகள், தங்கை போன்ற வேடங்களில் நடிக்க தொடங்கினார்.

மேலும் இவர் நவீன சரஸ்வதி சபதம் படத்தில் ஜெய் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். ஜில்லா, போராளி உள்ளிட்ட தமிழ் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து உள்ளார். இதை தவிர்த்து பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும், தர்பார் படத்தில் ரஜினியின் மகளாகவும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இவர் தமிழ் மற்றும் மலையாளம் தவிர்த்து தெலுங்கு மொழியிலும் பல படங்கள் நடித்து இருக்கிறார். மேலும் ராஜராஜேஸ்வரி, மை டியர் பூதம் போன்ற சீரியல்களில் நடித்து உள்ளார். தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் போல் போஸ் கொடுத்து உள்ளார். மேலும் இதனுடன் சேர்த்து பதினாறு வயதினிலே படத்தில் அவர் பேசும் இது எப்படி இருக்கு வசனத்தையும் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படம் எக்கசக்க லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here