குட்டி நித்யா மேனனா இது?? இப்படி கொழுகொழுனு இருக்கீங்களே! வாயடைத்து போன ரசிகர்கள்!!

0
nithya
ஏன்டா.. நான் தாய் கிழவியா - ஆசையாக கூப்பிட்ட ரசிகரை வெளுத்து வாங்கிய நடிகை நித்யா மேனன்!

அட்டகாசமான நடிப்புக்கு சொந்தக்காரரான நடிகை நித்யா மேனனின் இதுவரை யாரும் கண்டிராத சின்ன வயது கியூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை நித்யா மேனன்

நித்யா மேனன் என்று சொன்னதுமே நம் நியாபகத்துக்கு வருவது கண்மணி தான். எத்தனையோ கதாப்பாத்திரங்களை இவர் ஏற்று நடித்திருந்தாலும் நித்யா மேனனை எளிதாக நியாபகம் வைத்து கொள்வது அவர் நடித்துள்ள ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படத்தின் தாரா என்கிற ரோல் தான்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நித்யா மேனனின் சினிமா வாழ்க்கையும் சரி, தனிப்பட்ட வாழ்கையும் சரி பலருக்கு சிறந்த இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. கன்னடத்தை தாய் மொழியாக கொண்ட நித்யா மேனன் தனது அசராத நடிப்பால் தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சிறந்த நடிகையாக இருந்து வருகிறார்.

தற்போது பாலிவுட்டிலும் இவரது சினிமா பயணம் தொடர்ந்துள்ளது. மற்ற நடிகைகளைப்போல பெரிய ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும், டூயட் பாட வேண்டும், ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்றில்லாமல் வித்தியாசமான கதைகளை தேடி நடித்து வருகிறார்.

இன்னும் திருந்தாமல் விஜய்&சூர்யாவை குறை கூறும் மீரா – காண்டாகிய ரசிகர்கள்!!

பொதுவாக நித்யா மேனன் கதாநாயகனுக்கு நாயகியாக இருப்பதை விட கதையின் நாயகியாக இருப்பதையே அதிகமாக விரும்புவார். தமிழில் கூட இவர் கடைசியாக நடித்து வெளிவந்த ‘சைக்கோ’ திரைப்படம் இவருக்கு பாராட்டுகளை பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான நித்யா, ஆரம்பத்தில் சினிமா தான் தன் தொழிலாக போகிறது என நினைத்ததில்லையாம். தற்போது ரசிகர்களின் இதயத்துக்கேற்ற நாயகியாக இருந்து வரும் நித்யா மேனனின் சிறிய வயது புகைப்படங்கள் நிச்சயம் பார்ப்போரை வாவ் சொல்லவைக்கும் வகையில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here