பிக் பாஸ் பிரபலத்திடம் லெட்டர் மூலம் கெஞ்சிய விஜய் டிவி நடிகர்… என்ன என்ன சொல்லிருக்காருன்னு தெரியுமா???

0
பிக் பாஸ் 5இல் கலந்துகொள்ளும் 18 போட்டியாளர்கள் இவர்கள் தானாம் - பெயர் பட்டியல் இதோ!!

விஜய் டிவியின் பிரபல காமெடி ஷோ மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர் அறந்தாங்கி நிஷா மற்றும் பழனி. தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோவில் கவுண்டமணி மற்றும் செந்தில் அவர்களின் காமெடிக்கு ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை நிஷா தன்னுடைய இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.

திரைப்படங்களில் நகைச்சுவை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட அந்த நகைச்சுவை துறையில் சாதித்தவர்களின் எண்ணிக்கை கம்மி. அதிலும் பெண்கள் இந்த துறையில் வெற்றி பெறுவது என்பது மிக குறைவு. அத்தகைய எட்டா கனியை எட்டி பறித்து சின்னத்திரையில் நகைச்சுவை துறையில் நிலையான இடத்தை பிடித்து சாதித்து வருகிறார் அறந்தாங்கி நிஷா.

தன்னுடைய திறமையான மற்றும் காமெடியான பேச்சால் அனைவரையும் கவர்ந்த இவர் முதலில் பட்டிமன்ற பேச்சாளராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். அதாவது தன்னுடைய ஊரை சுற்றி உள்ள சிறு சிறு  பகுதிகளில் நடைபெறும் கோவில் திருவிழா விழாக்களுக்கு சென்று,  அங்கு நடைபெறும் பட்டிமன்றங்களில் பங்குபெற்று பேசிவந்தார். இந்நிலையில் அவருக்கு கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு தான் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு? என்ற  காமெடி நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் பல ஸ்டாண்டப் காமெடிகளை கூறி அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். தன்னை தாழ்த்தி கொண்டவர்..வாழ்வில் உயர்வார்  என்ற வார்த்தைகளை தனது செயல் மூலம் நிரூபித்தவர் அறந்தாங்கி நிஷா. மேலும் இவரின் இந்த பயணத்திற்கு அவரின் அம்மா, கணவர் மற்றும் மாமியார் என அவரின் குடும்பம்  உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

இந்த காமெடி நிகழ்ச்சிக்கு பிறகு அவர் பல விஜய் டிவி ஷோக்களில் தலை காட்டினார். மேலும் அவருக்கு இதன் மூலம் வெள்ளித்திரையிலும் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அதாவது, மாரி 2, ஆண் தேவதை, கோலமாவு கோகிலா, கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். மேலும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில ஷோக்களை தொகுத்தும் வழங்கி உள்ளார்.

இந்நிலையில் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் அறிமுகமான மற்றொரு காமெடி நடிகர் பழனி. இவரும் நிஷா அவர்களும் இணைந்து பல விஜய் டிவி ஷோக்களில் கலக்கி உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து கவுண்டமணி மற்றும் செந்தில் சேர்ந்து செய்த ஒரு காமெடிக்கு ரீல்ஸ் செய்துள்ளனர். அந்த ரீல்ஸ் வீடியோவை நிஷா தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here