இவ்வளவு பெரிய குடும்பமா உங்களுக்கு… Unseen புகைப்படத்தை வெளியிட்ட அறந்தாங்கி நிஷா!!!

0

விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்று நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர் அறந்தாங்கி நிஷா அவர்கள். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய குடும்பத்துடன் கடற்கரையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இதுவரை யாரும் பார்த்திராத அவரின் இந்த குடும்ப புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

சினிமாவில் நகைச்சுவை துறையில் பலர் சாதித்து வருகின்றனர். சந்திரபாபு, நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் தொடங்கி சந்தானம், யோகி பாபு என சொல்லிக்கொண்டு போகலாம். இருப்பினும் அந்த துறையில் பெண்கள் என்பது குறைவு தான். அதாவது மனோரமா, கோவை சரளா போன்ற சாதனை பெண்மணிகளின்  இடத்தை பிடிக்க இன்னும் பலர் முயற்சித்து வருகின்றனர்.

அந்த வரிசையில் சின்னத்திரையில் கலக்கி வருபவர் தான் அறந்தாங்கி நிஷா. மேடை பேச்சாளரான இவர் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் மக்களால் அறியப்பட்டார். தன்னை தாழ்த்தி கொண்டு காமெடி செய்யும் வடிவேல் அவர்களின் பாணியில் தனது பயணத்தை தொடர்ந்தார். இதன் மூலமாக பல்வேறு வெற்றிகளையும்  கண்டார்.  இதையடுத்து  அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அன்பு என்ற கூட்டத்தில் சேர்ந்து கொண்டு எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தார். இதனால் அவர் பல விமர்சனங்களை எதிர்கொண்டார்.

அந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பிறகு ஒரு சில விஜய் டிவி ஷோக்களில் தொகுப்பாளினியாகவும் மற்றும் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் தாடி பாலாஜி உடன் ஜோடி சேர்ந்து நடனமாடியும் வருகிறார். இந்நிலையில் அவர் தனது குடும்பத்துடன் பொழுதை கழிக்க கடற்கரைக்கு சென்றபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களின் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here