மக்களே உஷார்…, மீண்டும் பரவ தொடங்கும் நீபா வைரஸ்?? சுகாதாரத் துறை கடும் எச்சரிக்கை!!

0
மக்களே உஷார்..., மீண்டும் பரவ தொடங்கும் நீபா வைரஸ்?? சுகாதாரத் துறை கடும் எச்சரிக்கை!!
மக்களே உஷார்..., மீண்டும் பரவ தொடங்கும் நீபா வைரஸ்?? சுகாதாரத் துறை கடும் எச்சரிக்கை!!

கடந்த சில மாதங்களாக தான் பொதுமக்கள் கொரோனா தொற்றில் இருந்து மீள தொடங்கி உள்ளனர். இதற்கிடையில், வவ்வால் மூலமாக பரவக்கூடிய நீபா என்ற புதிய வகை வைரஸ் கடந்த செப்டம்பர் மாதத்தில் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பரவி பெரும் அச்சுறுத்தலால் ஏற்படுத்தி இருந்தது. இந்த நீபா வைரஸ் தொற்றால் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளும் கடந்த செப்டம்பர் மாதம் பலப்படுத்தப்பட்டு இருந்தது.

Enewz Tamil WhatsApp Channel 

அரசின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் நீபா வைரஸ் தொற்று சிறிது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், நிபா வைரஸின் பரவலை அதிகரிக்கும் வவ்வால்கள், கேரளாவின் மூணாறு எம்.சி.காலனியில் உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கிற்கு மேல் தங்கி உள்ளதால், மீண்டும் நீபா வைரஸ் பரவும் அபாயத்தில் மக்கள் உள்ளனர். இதனால், வவ்வால்கள் சாப்பிட்ட பழத்தை யாரும் சாப்பிட வேண்டாம் என மாநில சுகாதாரத்துறை பொது மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஏற்ற இறக்கத்துடன் விற்கப்படும் சின்ன வெங்காயம்…, இப்போ ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here