
கடந்த சில மாதங்களாக தான் கொரோனா பெருந்தொற்றில் இருந்து பொதுமக்கள் மீள தொடங்கி உள்ளனர். இந்நிலையில், வௌவால் மூலமாக நிபா என்ற புதிய வகை வைரஸ் கேரள மாநிலத்தில் பரவ தொடங்கி உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இந்த வைரஸால் கோழிக்கோட்டில் இருவர் உயிர் இறந்துள்ளனர். மேலும், இறந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் இந்த நீபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதையடுத்து, கேரளா மாநிலம் மற்றும் தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள 43 வார்டுகள் நோய் பாதிக்கப்பட்ட பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
மதுபிரியர்களே குட் நியூஸ்.., டாஸ்மாக் கடைகளில் புதிய ஏற்பாடு.., அமைச்சர் முத்துசாமி அதிரடி பேட்டி!!