Friday, March 29, 2024

விவசாயத்திற்கு மாறும் பழங்குடி மக்கள் – கொரோனாவால் நெருக்கடி..!!

Must Read

கொரோனா காலத்தில் உருவாகியிருக்கும் நெருக்கடிகளுக்கு நடுவே, தங்கள் நிலங்களைப் பசுமையாக்கி பாரம்பரிய விவசாயத்திற்கு மாறி வருகின்றனர்

நீலகிரி பழங்குடியினர்:

Nilagiri tribes
Nilagiri tribes

தமிழ்நாட்டில் நீலகிரியில் பழங்குடி மக்கள் அதிகம் , அதிலும் பண்டைய பழங்குடிகள் என்று அழைக்கப்படும் தோடர், கோத்தர், குரும்பர், இருளர், பணியர் மற்றும் காட்டு நாயக்கர் ஆகிய 6 இனங்கள் பெருமளவில் வசித்து வரும் பழங்குடி கிராமங்கள் இங்கு உள்ளன. இங்கு பல இடங்களில் காட்டில் வாழ்ந்தாலும் அவர்களுக்கென்று settlement நிலம் உண்டு. அங்கு அவர்கள் விவசாயம் செய்து வந்தனர் .

தங்கும் விடுதிகள்:

அப்போது முதுமலை சுற்றுவட்டார ரிசார்ட்டுகளில் (தங்கும் விடுதிகள்) மாதம் ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்குப் போனவர்கள் ஏராளம். பல ரிசார்ட்டுகள் யானைகள் வழித்தடத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் 39 ரிசார்ட்டுகளை மூட உத்தரவிட்டது. இதில் பல பழங்குடி மக்கள் வேலையிழந்தனர். இதனால் அவர்கள் பல்வேறு பகுதிகளுக்கு கூலி வேலை க்கு சென்றனர் .

அந்த வேலையும் கொரோனவினால் பொது முடக்கத்தால் இல்லாமல் போய்விட்டது. இதையடுத்து பலர் காடுகளுக்குள் சென்று தேன் எடுத்தல், கடுக்காய், பூச்சக்காய் சேகரித்தல், காட்டுக்கீரை, நூரே கிழங்கு எடுத்து வந்து சமைத்தல் என ஈடுபட்டனர். இதனால் தரிசாகக் கிடந்த தங்கள் பூர்விக நிலங்களின் பக்கம் இவர்களின் கவனம் திரும்பியிருக்கிறது. நிலங்களைச் சீர்படுத்தி ராகி, தினை, சோளம், கிழங்கு, மொச்சை, அவரை, துவரை, பீன்ஸ், மிளகாய் என பயிரிடத் தொடங்கியுள்ளனர்.

பழங்குடி போஜன் கூறியதாவது:

மசினக்குடி அருகே உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 600-கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன, அவற்றில் 50-கும் பெறப்பட்ட மக்கள் பாரம்பரிய விவசாயத்திற்குத் திரும்பிவிட்டதாகச் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த போஜன் கூறுகிறார் .

20-30 ஆண்டுகளாக தரிசாக கிடந்த தனது நிலத்தை இப்போது சரி செய்து விவசாயம் செய்து வருவதாகவும் ,இப்பொழுது விவசாயம் தான் பெரும் ஆறுதலாக உள்ளது என்று அவர் கூறினார் ,மேலும் தோட்டக்கலை ஆபீஸர் ஆலோசனைப்படி பச்சை காய்கறிகள் விளைவிப்பதாகவும் , வீட்டிற்கு கொஞ்சம் எடுத்து கொண்டு மற்றவற்றை மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு விற்பதாகவும் அனால் லாபம் இல்லை என்றும் கூறுகிறார் .

நீலகிரியைச் சேர்ந்த பழங்குடி மக்கள். ‘‘இது எங்களுக்கு வரமா, சோதனையா என்றெல்லாம் சொல்லத் தெரியலை. ஆனா, இப்போதைய சூழ்நிலைக்கு இதைத் தவிர எங்களுக்கு வேற வழியில்லை” என்கிறார்கள் இவர்கள்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

HOME WINS.. 9 போட்டிகள், 9 வெற்றிகள்.. சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் அணிகள்!!

ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -