கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல கால மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நாளை மறுநாள் (நவம்பர் 16) மாலை முதல் நடை திறக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்கள் நலன் கருதி பல்வேறு முன்னேற்பாடுகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பக்தர்கள் நிலக்கல்லில் இருந்து பம்பை வந்து செல்வதில் எவ்வித நெரிசலும் இல்லாமல் இருக்க கூடுதல் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளனர்.
அதேபோல் பம்பையில் இருந்து திருவனந்தபுரம், செங்கனூர், எர்ணாகுளம், கோட்டயம், குமுளி, தேனி, கம்பம், பழனி, தென்காசி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. குழுக்களாக வரும் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் டிக்கெட் வழக்கும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.