என்றும் நாயகன் விஸ்வநாதன் ஆனந்த் தான் பா – ஒப்புக்கொண்ட நிகில் காமத்

0

இந்தியாவின் இளைய கோடீஸ்வரர் நிகில் காமத் ஆனந்தை வெல்ல கணினி உதவியை எடுத்ததாக ஒப்புக் கொண்டார் தற்போது இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நிகில் காமத்:

17 வயதில் 8 ஆயிரம் சம்பளத்தில் வாழ்வை தொடங்கிய நிகில் காமத், பின்னர் தனது மூத்த சகோதரர் நிதின் காமத்துடன் சேர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய பங்கு தரகு நிறுவனமான ஜெரோதாவை இணைத்து நிறுவினார். இவர்கள் ட்ரூ பீகான் என்ற நிர்வாக மேலாண்மை நிறுவனத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். 2020இல் போர்ப்ஸ் வெளியிட்ட இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் இவர்கள் இடம்பெற்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்கள்.

விஸ்வநாதன் ஆனந்த் இதுவரையில் ஐந்து முறை உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். ஆன்லைன் தொண்டு செஸ் போட்டியில் முன்னாள் உலக சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தை வீழ்த்த கணினி உதவி எடுத்ததாக ஒப்புக் கொண்டார். மேலும் விளையாட்டை பகுப்பாய்வு செய்யும் நபர்களின் உதவியை எடுத்ததாகவும் கூறினார்.

இது குறித்து “விஸ்ஸி ஐயாவை ஒரு சதுரங்க விளையாட்டில் நான் உண்மையில் வென்றேன் என்று பலர் நினைப்பது நகைப்புக்குரியது, அது கிட்டத்தட்ட நான் எழுந்து உசேன் போல்ட்டுடன் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை வென்றது போன்றது”. என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here