தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு அமல் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!!

0

கடந்த மாதம் முதல் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமாக கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் இரவு நேரம் மற்றும் ஞாயிற்று கிழமை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அமல்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு வீசிய கொரோனாவின் முதல் அலையை விட தற்போது வீசும் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு இன்று(ஏப்ரல் 20) முதல் நடைமுறைக்கு வருகிறது. இரவு நேர ஊரடங்கின் போது அத்யாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இரவு நேர ஊரடங்கு 10 மணி முதல் காலை 4 மணி வரை அமலில் இருக்கும். அப்போது வெளி மாநில/மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் ஆம்னி, டாக்சி, ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்யாவசிய லோடு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இரவு நேரங்களில் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவித்தனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் குறையும் கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!

மேலும் இரவு நேரங்களில் ரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்பவர்கள் ஆட்டோ, டாக்சி மூலம் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஊடங்கங்கள், பத்திரிக்கை துறை மற்றும் பெட்ரோல் பங்குகள் இரவு நேரங்களில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்யாவசிய பணிகளான பால் விநியோகம், பத்திரிக்கை விநியோகம் மருந்தகம், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளதால் மக்கள் அனைவரும் நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here