கொரோனா பரவல் எதிரொலி – தமிழகத்தில் நாளை முதல் ஊரடங்கு அமல்!!

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய் தொற்றின் பரவல் மிக அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு தற்போது ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் தமிழக அரசு பல்வேறு கட்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அமல்படுத்தி வந்தது. இருந்தும் தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டு வந்தது. நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரக்கணக்கில் அதிகரித்து வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக தமிழக முதல்வர் இதனை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது தமிழகத்தில் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த நடவடிக்கை தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 20ம் தேதி முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை நடைமுறையில் இருக்கும். அதேபோல் ஞாயிற்று கிழமையில் முழு நேர ஊரடங்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் சரக்கு வாகனங்கள், மருத்துவ பணிகள், எரிபொருள் வாகனங்கள் போன்றவற்றிற்கு மட்டுமே அனுமதி.

ஊடகம் மற்றும் பத்திரிக்கை துறை மற்றும் பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து இரவில் செயல்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதேபோல் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்யாவசிய தேவைகளின் தொழிற்சாலைகள் இரவு நேரத்தில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கின் போது இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை வெளி மாநில/மாவட்ட போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

மேலும் இரவு நேரங்களில் ஆட்டோ, டாக்சி போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரம், ரயில் நிலையம் செல்வதற்கு, விமான நிலையம் செல்வதற்கு மட்டுமே ஆட்டோ, டாக்சி போன்றவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளான பால்‌ விநியோகம்‌, தினசரி பத்திரிக்கை விநியோகம்‌, மருத்துவமனைகள்‌, மருந்தகங்கள்‌, ஆம்புலன்ஸ்‌ மற்றும்‌ அமரர்‌ ஊர்தி சேவைகள்‌ போன்ற மருத்துவம் சார்ந்த பணிகள்‌ இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்‌.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here