கேரளாவில் நிபா வைரஸ் நோயால் இருவர் பாதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து உயிரிழந்தவரின் மகன் உள்பட 4 பேருக்கும் வைரஸ் தொற்று பரவியதால், இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட சுமார் 1,200க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். கோழிக்கோடு மாவட்டத்தில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் அம்மாநில அரசு மேற்கொண்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக நிபா வைரஸ் நோயால் புதிய பாதிப்புகள் இல்லை என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதையடுத்து நிபா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது.
“மக்களைத் தேடி மேயர்”: இந்த மண்டலங்களில் உள்ள பொதுமக்களிடம் நாளை சந்திப்பு.,