இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து வெளிவந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளது. இருந்தாலும் காலநிலை மாற்றம் காரணமாக பல்வேறு நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கேரளாவில் நிஃபா வைரஸ் தாக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்த நிலையில், இவர்களுடன் தொடர்பில் இருவருக்கும் இந்த வைரஸ் பரவி உள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
எனவே வைரஸால் பாதிக்கப்பட்ட இந்த 4 நபருடன் தொடர்பில் இருந்த 168 பேரை தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் கோழிக்கோடு மாவட்டத்தில் 7 பஞ்சாயத்துகளுக்கு ஊரடங்கு பிறப்பித்ததோடு மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்க கேரள அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.