முழுக்க முழுக்க மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வரும் நிதி அகர்வால் தற்போது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்களும் அந்த புகைப்படத்தைப் பார்த்து இவ்வளவு க்யூட்டாக இருக்கிறீங்க என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
நிதி அகர்வால் ரீசென்ட் போஸ்ட்:
ஜெயம் ரவிக்கு ஜோடியாக பூமி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நிதி அகர்வால். தனது முதல் திரைப்படத்திலேயே எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாதித்தார்.

இதைதொடர்ந்து சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் என்னும் திரைப்படத்தில் நடித்தார். ஈஸ்வரன் திரைப்படமும் நினைத்ததை காட்டிலும் அதிக அளவில் வரவேற்பை கொடுத்தது. இதற்கு பிறகு பல திரைப்பட வாய்ப்புகள் வந்தபடியே தான் இருக்கிறது.

திரைப்படங்களைக் காட்டிலும் மாடலிங் துறையில் நிதி அகர்வால் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். மேலும், திரைப்படம், மாடலிங் என பிஸியாக இருந்தாலும் கூட சமூக வலை பக்கங்களில் நேரத்தை செலவிட்டு வருகிறார். அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை தனது ரசிகர்களுக்காக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார்.

தற்போது முழு நீள உடையுடன் ஜவுளிக் கடை பொம்மை போல ஜொலிக்கும் படியான ஒரு புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். ரசிகர்களும் அந்த புகைப்படத்தைப் பார்த்து தாறுமாறாக கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.