மாங்காயில ஊறுகாய் செஞ்சிருப்பீங்க… அவியல் செஞ்சிருக்கீங்களா?? அப்போ இத கண்டிப்பா ட்ரை பண்ணிப்பாருங்க!!! 

0

மாங்காய் என்றால் விரும்பாத நபர்களே இல்லை. மேலும் இது காய்,பழம் என எடுத்துக் கொண்டாலும் உடலுக்கு ஆரோக்கியம் தான். மேலும் இதன் ஊறுகாய் எல்லாவித சாதத்திற்கு ஏற்ற ஒரு அருமையான சைடு டிஷ் ஆகும். இந்நிலையில் இதில் அவியல் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம்.

தேவையான பொருட்கள்

மாங்காய் – 1

வெங்காயம் – 1

தேங்காய் துருவல் – 1 கப்

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

பூண்டு – 1

சீரகம் – 1/2 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் – 2

கடுகு – 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் தேங்காய் துருவல்,மிளகாய் வற்றல், சீரகம், மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து கொள்ள வேண்டும் மாங்காய் நன்கு சுத்தம் செய்து நீள வாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும். அதன் பின்னர் ஓர் கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து கொண்டு வதக்கவும்.

அதில் நறுக்கி சுத்தம் செய்த மாங்காய் துண்டுகளை சேர்த்து கொண்டு லைட்டாக வதக்கி கொள்ளவும், அதன் பின்னர் அதனுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து குழைய விடாமல் வேக வைத்து கொள்ள வேண்டும். அதில் அரைத்த கலவையை சேர்த்து கொண்டு நன்கு கிளறி கொள்ள வேண்டும். இதனையடுத்து பச்சை வாடை நீங்கிய பின்னர், அவியல் பதத்திற்கு வந்ததும் இறக்கி வைத்து கொள்ள வேண்டும். தற்போது சுவையான சூப்பரான மாங்காய் அவியல் ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here