90s கீட்ஸின் பேவரைட் நாகர்கோவில் கூட்டாஞ்சோறு ரெசிபி… இனி வீட்டிலேயே செய்யலாம்!!!

0

கூட்டாஞ்சோறு என்றால் சிறுவர்கள் விளையாடும் போது செய்யும் ஒரு விளையாட்டு உணவு என்றே நம்மில் பலர் அறிந்த ஒன்று. இல்லை என்றால் இளசுகள் ஒன்று கூடினால் தங்களின் கையில் கிடைத்த மளிகை  பொருட்களை வைத்து அனைவரும் ஒன்றுகூடி சமைக்கும் பெயரிடப்படாத உணவு தான் கூட்டாஞ்சோறு. இப்பொழுது  நாகர்கோவில் ஸ்டைலில் வீட்டிலேயே எளிய முறையில் கூட்டாஞ்சோறு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

அரிசி -1/2 கிலோ

பருப்பு – 1/4 கிலோ

கத்தரிக்காய் – 1

முருங்கைக்காய் – 1

உருளைக்கிழங்கு – 1

தடியங்காய்/வெள்ளரிக்காய்  – 6 துண்டுகள்

மாங்காய் – 3 துண்டுகள்

வாழைக்காய் – 1

சின்ன வெங்காயம் – 10

கேரட் – 1

புளி தண்ணீர் – சிறிதளவு

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி

முருங்கைக்கீரை – சிறிதளவு

தேங்காய் துருவல் –  1 கப்

மிளகாய் வற்றல் – 3

மிளகு – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

கடுகு – 1 தேக்கரண்டி

செய்முறை

முதலில் தேங்காய் துருவல், மிளகாய் வற்றல், மிளகு, சிறிதளவு சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும். அதன் பிறகு நன்கு கழுவிய அரிசி மற்றும் பருப்பை வேக வைக்கவும். அரை வேக்காட்டில் வெந்து இருக்கும் பருப்பு மற்றும் அரிசியுடன் நறுக்கிய வைத்த கத்தரிக்காய், முருங்கைக்காய், உருளைக்கிழங்கு, தடியங்காய்/வெள்ளரிக்காய், மாங்காய், கேரட், வாழைக்காய், சின்ன வெங்காயம் சேர்த்து கொள்ளவும். அதில் மஞ்சள் தூள், பெருங்காயம் சேர்த்து நன்றாக கலந்து கொண்டு வேக விடவும், சிறிது வெந்தவுடன் சிறிதளவு புளி தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.

முக்கால் வாசி வெந்து வரும் வேளையில் அரைத்து வைத்த விழுதை சேர்த்து கொண்டு கொதிக்கவிடவும். அதன் பின்னர் வேறு ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு,கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், வெந்தயம் சேர்த்து தாளித்து கொண்டு அதை அதில் கொட்டி விட வேண்டும், அந்த கடாயிலேயே முருங்கை கீரை லைட்டாக வதங்கி அதையும் அதனுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.  பிறகு அரிசி, பருப்பு, கீரை அனைத்தும் ஒன்றோடு ஒன்று சேருமாறு கிளறி விடவும். தற்போது மணமணக்கும் சுவையான கூட்டாஞ்சோறு ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here