திகட்டாத சுவையில் நாஞ்சில் நாட்டு நெத்திலி மீன் அவியல்… உடனே செஞ்சு அசத்துங்க!!!

0

மீனில் எண்ணிலடங்காத பல்வேறு சத்துக்கள் நிறைந்து உள்ளது. மேலும் நாம் அதிக அளவில் மீனை உணவில் சேர்த்து கொண்டால் பல்வேறு வித நோய்களில் இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ளலாம். மேலும் இது சிறு குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், முதியவர்கள் என அனைவருக்கும் ஏற்ற ஒரு அசைவ உணவு. தற்போது இந்த பதிவில் நாஞ்சில் நாட்டு நெத்திலி மீன் அவியல் எவ்வாறு செய்யலாம் என இங்கு பாப்போம்.

தேவையான பொருட்கள்

நெத்திலி மீன் – 1 கிலோ

தேங்காய் துருவல் – 1 கப்

மிளகாய் வற்றல் – 4

மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 2

மாங்காய் – 4 துண்டுகள்

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் நெத்திலி மீனை நன்கு தலை மற்றும் வால் கிள்ளி போட்டு விட்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். அதன் பிறகு தேங்காய் துருவல்,மிளகாய் வற்றல், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சின்ன வெங்காயம் போன்றவற்றை சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் மீன்களை கழுவி  மண் சட்டி அல்லது பாத்திரத்தில் போட்டு நறுக்கி வைத்து உள்ள மாங்காய், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு  சேர்த்து கிளறி கொள்ளவும்.

அதன் பிறகு அரைத்து வைத்த தேங்காய் கலவையை சேர்த்து கொண்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு கொதிக்கவிட்டு  அவியல் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். தற்போது சுவை மிகுந்த நெத்திலி மீன் அவியல் ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here