ஹெல்த்தியான ஸ்பெஷல் வெண்டைக்காய் அவியல்… சுவைத்து பாருங்கள்!!!

0
ஹெல்த்தியான ஸ்பெஷல் வெண்டைக்காய் அவியல்... சுவைத்து பாருங்கள்!!!
ஹெல்த்தியான ஸ்பெஷல் வெண்டைக்காய் அவியல்... சுவைத்து பாருங்கள்!!!

நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகளில் நமது உடலுக்கு தேவையான பல சத்துக்கள் நிறைந்து உள்ளது. மேலும் ஒவ்வொரு காய்கறிகளும் ஒவ்வொரு விதத்தில் நமக்கு நன்மை தரக்கூடியவை. அந்த வகையில் வெண்டைக்காய் பொறுத்தமட்டில் மூளை சுறுசுறுப்பு, ஞாபக சக்தி அதிகரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி தருதல் என பல்வேறு விதத்தில் நன்மை தருகிறது. இந்நிலையில் நாம் இந்த பதிவில் நாகர்கோவில் ஸ்பெஷல் வெண்டைக்காய் அவியல் எவ்வாறு செய்வது என்பதை தான் காண உள்ளோம்.

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் – 150 கிராம்

வெங்காயம் – 2

தக்காளி – 1

தேங்காய் துருவல் – 1 கப்

சீரகம் – 1 தேக்கரண்டி

மிளகாய் வற்றல் – 2

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

கடுகு – 1/4 தேக்கரண்டி

புளி தண்ணீர் – 1/4 கப்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு -தேவையான அளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

ஹெல்த்தியான ஸ்பெஷல் வெண்டைக்காய் அவியல்... சுவைத்து பாருங்கள்!!!
ஹெல்த்தியான ஸ்பெஷல் வெண்டைக்காய் அவியல்… சுவைத்து பாருங்கள்!!!

செய்முறை

முதலில் வெண்டைக்காயை தண்ணீரில் கழுவி நீளவாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும். அதன் பின்னர் தேங்காய் துருவல்,சீரகம்,மிளகாய் வற்றல்,மஞ்சள் தூள் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து கொள்ள வேண்டும். இதனையடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். வெங்காயம் வதங்கிய பின்னர் தக்காளியை சேர்த்து கிளறி கொள்ள வேண்டும்.

அதன் பிறகு நறுக்கி வைத்து உள்ள வெண்டைக்காயை சேர்த்து சேர்த்து பசை தன்மை போக வதக்கி கொண்டு, தேவையான அளவு உப்பு, தண்ணீர் மற்றும் புளி கரைசல் சேர்த்து வேக விட வேண்டும்.வெண்டைக்காய் வெந்து தண்ணீர் வற்றி வரும் வேளையில் அரைத்து வைத்து உள்ள தேங்காய் கலவையை சேர்த்து பச்சை வாடை நீங்க வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அவியல் பதத்திற்கு வந்ததும் சிறிது கறிவேப்பிலை தூவி இறக்கி விடவும். தற்போது சுவையான ஹெல்தியான வெண்டைக்காய் அவியல் ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here