
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் உச்சியில் இருந்து வரும் நிலையில், அத்தியாவசிய தேவைக்கு கூட மக்கள் வீட்டை விட்டு வெளிய வருவதற்கு அச்சம் அடைகின்றனர். அதுமட்டுமின்றி சில முக்கிய இடங்களில் வெயில் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் வெயிலின் சூட்டை தணிக்கும் விதமாக அடுத்த மூன்று மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்றுவது நிறுத்தம், அடுத்தது என்ன?? அதிர்ச்சி ரிப்போர்ட்!!!
அதாவது தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது. திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், பெரம்பலூர், திண்டுக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, சேலம், திருச்சி, ஈரோடு மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்த அம்மாவட்டங்களில் வாழும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.