அடுத்த 10 ஆண்டுக்குள் பூமியை தாக்கும் சூரியப் புயல் – கலிபோர்னியா ஆய்வாளரின் அதிர்ச்சி தகவல்!!

0

வருகின்ற 10 ஆண்டுகளுக்குள் பூமியை சூரிய புயல் தாக்குவதற்கு 1.6 சதவீதம் முதல் 12 சதவீதம் வாய்ப்புள்ளதாக கலிபோர்னியா ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரிய புயல்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஆய்வகத்தில் உள்ள ஆய்வாளர்கள் ஒரு முக்கிய ஆய்வின் முடிவை வெளியிட்டுள்ளனர். அதாவது, 1989 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சூரியப் புயலால் கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்தில் மின் அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், அவற்றில் இருந்து வெளிப்பட்ட ஒளியால் அப்பகுதியில் இரு நாட்களுக்கு பிரகாசமான ஒளி வீசியதாகவும்  தெரிவித்தனர்.

இந்த சூரிய புயலால், சூரியனின் மேற்பரப்பில் சுமார் ஒரு மில்லியன் வேகத்தில் ஒளிக்கதிர்கள் சுழன்று அடிப்பதாகவும், 1.6 மில்லியன் வேகத்தில் இந்த கதிர்கள் பூமியை தாக்கும் எனவும் அஞ்சப்பட்டது. மேலும், இந்த காரணங்களால், 2022 ஆம் ஆண்டுகளில் சூரியனில் இருக்கும் கரும்புள்ளிகள் மூலம் இதுபோன்ற புயல்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும், அவை பூமியின் காந்தப்புலத்தில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்து இருந்தனர்.

சூரியனில் ஏற்பட்டுள்ள அதிக சக்தி வாய்ந்த கதிர்வீச்சுப் புயலால் செல்போன் மற்றும் ஜி.பி.எஸ் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது மட்டுமல்லாமல், தங்களுடைய கணக்குப்படி, இன்னும் 10 ஆண்டுகளில் இந்த சூரிய புயல் பூமியை தாக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

அதற்கான சாத்தியக்கூறுகள் 1.6 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தினர்.  கலிபோர்னியா ஆய்வாளர்களின் இந்த ஆய்வு முடிவு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here