மக்களின் நலனுக்காக தனது கல்யாணத்தையே நிறுத்திய பிரதமர் – அந்த மனசு தான் சார் கடவுள்!!

0
தன்னைத் தானே சுய திருமணம் செய்துகொண்ட 24 வயது பெண் -  தேனிலவுக்காக ஒரு வாரம் கோவா ட்ரிப்!!
பிரபல நடிகரை ரகசிய திருமணம் செய்து கொண்ட ஆர்யா பட நடிகை - வைரலாகும் கல்யாண போட்டோஸ்!!

நியூசிலாந்து நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், தன்னுடைய சொந்த திருமணத்தை அதிரடியாக நிறுத்தி அந்நாட்டின் பிரதமர், மக்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளார்.

 திருமணத்தை நிறுத்திய பிரதமர் :

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டர்ன் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே இவர், கொரோனாவை எதிர்கொண்டு, உலக அளவில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர் என்ற பெருமையைப் பெற்றார். இதுவரை நாட்டில் 15,550 நபர்கள் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 52 பேர் பலியாகியுள்ள நிலையில், தற்போது வரை 1,096 நபர்கள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் ரெட்  செட்டிங் எனப்படும், கடுமையான ஊரடங்கு   கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 100 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா தனது சொந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார். இவர் தனது நீண்ட நாள் காதலர் கிளார்க் கேபோர்டை கோலாகலமாக திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளால் அந்த திருமணத்தை நிறுத்தியுள்ளார். பிரதமரின் இந்த அதிரடி செயல், உலக அரங்கில் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here