இந்தியாவை வாஷ் அவுட் செய்து திருப்பிக் கொடுத்தது நியூசி..!

0

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதிய 3 ஒருநாள் போட்டிகளிலும் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று 3 – 0 என்ற கணக்கில் வாஷ் அவுட் வெற்றி பெற்றுள்ளது. மேலும் டி20 போட்டியில் 5 – 0 என இந்தியா பெற்ற வெற்றிக்கும் நியூஸிலாந்து அணி ஒருநாள் தொடரில் சிறப்பான பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியா 296 ரன்கள்:

இந்திய அணி துவக்க வீரர் அகர்வால் 1 ரன்னில் வெளியேறினார். இதனால் வழக்கம் போல இந்திய அணியின் தொடக்கம் சரியாக அமையவில்லை. கேப்டன் விராட் கோஹ்லியும் (9) இந்த முறை ஏமாற்றினார். மறுமுனையில் நிதானமாக ஆடிய பிரிதிவி ஷா 40 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

ஷ்ரேயஸ் அய்யர் (62) அரைசதம் அடித்திருந்த நிலையில் கிராண்ட்ஹோமிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே ஜோடி 100 ரன்கள் அடித்தது. சிறப்பாக ஆடிய ராகுல் (112) சதம் அடித்து அசத்தினார். மனிஷ் பாண்டே 42 ரன்கள் அடித்தார். முடிவில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் அடித்தது.

நியூஸிலாந்து அணி சார்பில் பென்னெட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

நியூஸிலாந்து சிறப்பான பேட்டிங்:

297 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணியில் ஓப்பனிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கப்தில் (66) நிக்கோலஸ் (80) ரன்களும் எடுத்தனர். கேப்டன் வில்லியம்சன் 22 ரன்னில் கேட்ச் ஆனார். முடிவில் நியூஸிலாந்து அணி 47.1 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் அடித்து இலக்கை எட்டி வெற்றி பெற்றது. க்ராண்ட்ஹோம் (58) அரைசதம் அடித்தார்.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

இந்திய அணியில் சாஹல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் நியூஸிலாந்து அணி 3 – 0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இன்னும் அடுத்த 2 டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோத உள்ளன.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here