ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருவது நாம் அறிந்ததே. இந்த நிலையில் நேற்று (01.11.2023) நடைபெற்ற முக்கிய போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்த்து நியூசிலாந்து மோதியது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Enewz Tamil WhatsApp Channel
நடப்பு 50 ஓவர் உலக கோப்பையில் அடுத்தடுத்த தோல்விகளை நியூசிலாந்து அணி சந்தித்துள்ளது. அதன் விளைவாக அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதுவரை ஆடிய 7 போட்டிகளில் அந்த அணி 4 வெற்றிகள் மட்டுமே பெற்று 8 புள்ளிகளுடன் 4வது இடத்தை பிடித்துள்ளது. இந்த உலக கோப்பையில் மீதமுள்ள இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியை நியூசிலாந்து அணி வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.