வீரர்களை ஐபிஎல்லில் விளையாட வழிவகை செய்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்.., 4 பேருக்கு மட்டுமே அனுமதி??

0
வீரர்களை ஐபிஎல்லில் விளையாட வழிவகை செய்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்.., 4 பேருக்கு மட்டுமே அனுமதி??
வீரர்களை ஐபிஎல்லில் விளையாட வழிவகை செய்த நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்.., 4 பேருக்கு மட்டுமே அனுமதி??

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடருக்காக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், அந்நாட்டு வீரர்களுக்கு சில சலுகைகளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் 2023:

சர்வதேச நியூசிலாந்து அணியானது, தற்போது இலங்கை அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இலங்கை அணி வீழ்ந்ததன் மூலம், 1-0 என தொடரை வெல்ல நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. இந்த தொடரை தொடர்ந்து, நியூசிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிராக தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட திட்டமிட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த தொடர்கள் இரு தொடர்கள் மார்ச் 25ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி முடிவடைய உள்ளது. இதனால், நியூசிலாந்து வீரர்கள் இந்தியாவில் மார்ச் 31ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நியூசிலாந்து கிரிக்கெட் வாரியமானது, சில வீரர்களை மட்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க வைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

IND vs AUS பார்டர் கவாஸ்கர் டிராபி: இனி 4 டெஸ்ட் கிடையாதா?? அடுத்த சீசன் குறித்த வெளியான நியூ அப்டேட்!!

அதாவது, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்த தொடரில் இருந்து, நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், டிம் சவுத்தி, டெவோன் கான்வே ஆகியோர் மிட்செல் சான்ட்னர் விடுவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. இவர்கள், நியூசிலாந்து அணியில் இல்லை என்றால், ஐபிஎல் தொடரில் பங்கு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவர்களுக்கு பதில், நியூசிலாந்து அணியில், லாக்கி பெர்குசன், ஃபின் ஆலன் மற்றும் க்ளென் பிலிப்ஸ் ஆகியோர் இடம் பெறுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here