கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும், தற்போது இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலக கோப்பையை எதிர்நோக்கி உள்ளனர். இந்நிலையில், அடுத்த வருடம் (2024) வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, 20 அணிகளை மையமாக கொண்டு இந்த டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த தொடர், அடுத்த வருடம் ஜூன் 4ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 ஆம் தேதி முடிவடையும் என்று ஐசிசி முன்னதாக அறிவித்தது. இதையடுத்து, மோதும் அணிகளின் விவரம், போட்டி நடைபெறும் மைதானம் போன்றவற்றை வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்கா மற்றும் ஐசிசி தேர்வு செய்து வருகிறது. இந்நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நியூயார்க் நகரத்தில் நடத்த திட்டமிட்ட பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலக கோப்பையில் இந்திய மைதானங்கள் இப்படி தான் இருக்க வேண்டும்…, ஐசிசி போட்ட புதிய ரூல்ஸ்!!