இன்று நள்ளிரவு புதிதாக பிறக்கும் ஆங்கில புத்தாண்டு – கவர்னர் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்து!!

0

இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு பிறக்கும் ஆங்கில புத்தாண்டு தினத்தை ஒட்டி, அனைத்து தலைவர்களும் பொது மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாழ்த்து சொன்ன தலைவர்கள் :

இன்று நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. இதையடுத்து, பல தலைவர்களும் பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதில் தமிழக கவர்னர் ஆர் என் ரவி, அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்றும், இந்த நல்ல நாளில் மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பரிபூரண ஆயுள் கிடைக்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.

மேலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர், இந்தப் புத்தாண்டு  இறைவன் நமக்கு அனைத்து நன்மைகளையும் கொடுக்கட்டும் என வாழ்த்தி உள்ளளார். தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே எஸ் அழகிரி அவர்கள், தமிழகத்தில் மலர்ந்துள்ள புதிய ஆட்சியால் மக்கள் எந்த சிரமும் இல்லாமல் பயனடைந்து வருவதாகவும், இந்த வளர்ச்சி மாற்றத்தை போல புத்தாண்டும் இனிமையாக அமையட்டும் எனவும் வாழ்த்தியுள்ளார்.

அதேபோல் பாமக நிறுவனர் ராமதாஸ், கடந்த இரண்டு ஆண்டுகளாக நாம் அனுபவித்த இன்னல்கள் எல்லாம் இந்த புத்தாண்டு முதல் மறையட்டும்..இது எல்லோருக்கும் நலன்களை வழங்கட்டும் என தெரிவித்துள்ளார். இதேபோல் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தமக கட்சித் தலைவர் ஜிகே வாசன், பாமக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன், திராவிட கழகத் தலைவர் வீரமணி, உள்ளிட்ட பலரும்  பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here