தமிழகத்தில் புதிய வாக்காளர் அட்டை இந்த நாளில் தான் கிடைக்கும்.., தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!!!

0
தமிழகத்தில் புதிய வாக்காளர் அட்டை இந்த நாளில் தான் கிடைக்கும்.., தலைமை தேர்தல் அதிகாரி தகவல்!!!
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதனால் தமிழக தேர்தல் ஆணையம் அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. இன்னொரு பக்கம் அந்தந்த கட்சியினரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்தல் போன்றவற்றிற்கான முகாம்கள் நடைபெற்றது.
இந்த முகாம்களின் முடிவில் தமிழகத்தில் மட்டும் 18 லட்சம் பேர் புதிய வாக்காளர்களாக விண்ணப்பித்தனர். ஆனால் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தற்போது வரை இவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை இன்னும் வழங்கவில்லை. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மார்ச் மாதத்திற்குள் புதிதாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்த 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். இதுபோக வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் மேற்கொண்டவர்களுக்கும் புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here