சீனாவில் தோன்றி உள்ள புதிய வைரஸ்.. கிடுகிடுவென உயர்ந்த தொற்று பாதிப்பு – பயத்தின் உச்சியில் மக்கள்!

0
சீனாவில் தோன்றி உள்ள புதிய வைரஸ்.. கிடுகிடுவென உயர்ந்த தொற்று பாதிப்பு - பயத்தின் உச்சியில் மக்கள்!

சீனாவில் ஆரம்பித்த கொரோனாவின் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தியதை தொடர்ந்து தற்போது சீனாவில் மீண்டும் ஒரு புதிய வகை வைரஸ் கண்டறியபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய வகை வைரஸ்:

2019 ஆம் ஆண்டின் இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகில் பேரழிவை ஏற்படுத்தியது. அதில் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். மேலும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் வணிக நகரமான வுகான் நகரில் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டில் மிதமாக பரவி வந்த கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக சீன நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சீனாவில் மீண்டும் ஒரு புதிய வகை வைரஸ் கண்டறியபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சீனாவின் முக்கிய பகுதியான ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் புதிய வகை லாங்யா ஹெனிப என்ற வைரஸ் பரவி வருவதாகவும், இதுவரை 35 பேர் அந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் குளோபல் டைம்ஸ் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் விலங்குகளிடம் இருந்து பரவி இருக்கலாம் என மருத்துவர்களால் சந்தேகிக்கப்படுகிறது. சீனாவில் ஆரம்பித்த கொரோனாவின் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரவே மக்கள் படாதபாடு பட்டதை தொடர்ந்து தற்போது புதிய தொற்று பரவுவதால் உலகமே பயத்தில் ஆழ்ந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here