வங்கி வாடிக்கையாளர்களை உஷார் .., மொபைல் பேங்கிங் வழியாக பணம் திருட்டு!!

0
வங்கி வாடிக்கையாளர்களை உஷார் .., மொபைல் பேங்கிங் வழியாக பணம் திருட்டு!!

இந்திய கம்ப்யூட்டர் அவசர நிலை நடவடிக்கை குழு, நேற்று பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த வருடம் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வந்த ‘சோவா’ என்ற வைரஸ் “யூசர் நேம், பாஸ்வேர்டு” ஆகியவற்றை திருடி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த வைரஸ், ரஷ்யா ஸ்பெயின், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளை குறி வைத்து தாக்கியுள்ளது. மேலும் இந்த வைரஸ், சட்டபூர்வ செயலிகளின் சின்னத்தை காட்டும் போலி ஆன்ட்ராய்டு செயலிகளுக்குள் தன்னை மறைத்துக் கொண்டு, வங்கி வாடிக்கையாளர்களை பதிவிறக்கம் செய்ய வைக்கிறது.

ஒரு நபர், இந்த போலி ஆண்ட்ராய்டு செயலிகளை டவுன்லோட் செய்தால், அந்த நபரின் போனில் முன்னதாக உள்ள செயலிகளின் விவரங்களை வைரசின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வருக்கு தெரிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸ் பேங்கிங் செயலிகளை தான் பாதிக்கிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

ஒரு நபர் தனது மொபைல் போனில், பேங்க் செயலியை பயன்படுத்தும்போது, “யூசர் நேம், பாஸ்வேர்டு” போன்ற தகவல்களை உள்ளிடுவார்கள், அப்போது இந்த புதிய வைரஸ் அந்த தகவல்களை திருடி விடும். இதன் மூலம் நபரின் வங்கிக்கணக்கில் உள்ள பணம் அந்த வைரஸால் திருப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here