“அவசரப்பட்டு கல்யாணம் பண்ணிட்டீங்க…உங்களை Sight அடிக்க கூட முடியல…” – விஜய் டிவி பிரபலத்தின் புகைப்படங்கள்!!!

0

பிரிவோம் சந்திப்போம் சீரியலில் அறிமுகமாகி சின்னத்திரை இளவரசியாக வலம் வருபவர் ரக்சிதா மகாலட்சுமி. அதே சீரியலில் நடித்த நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் தொலைக்காட்சியில் வெளியான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்தார்.

விஜய் டிவி பிரபலத்தின் புகைப்படங்கள்:

ரக்ஷிதா என்று சொல்வதை விடவும் சரவணன் மீனாட்சி மீனாட்சி என்று சொன்னாலே அனைவர் மனதிலும் டக்கென்று ஞாபகத்திற்கு வருவது இவர்தான். சீரியலில் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் வாயாடி ஆகவும் மிகவும் துணிச்சலான பெண்ணாக இருந்தால் நடித்திருப்பார். ஆனால் நிஜத்தில் இன்னும் குழந்தை மணம் மாறாத குமரியாக தான் இருந்து கொண்டிருக்கிறாராம்.

பிரிவோம் சந்திப்போம் சீரியலில் முதல் முதலில் அறிமுகம் ஆனாலும் இவருக்கு சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாகத்தான் பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது. முதல் சீரியலில் கருப்பழகி யாகதான் ரசிகர்களை கவர்ந்து இழுத்து இருந்தார். சரவணன் மீனாட்சி சீரியலில் தொடர்ந்து மூன்று சீசன்களில் மீனாட்சி ஆக நடித்து பல கதாநாயகர்கள் மாறினாலும் மாறாத ஒரே கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருந்தார்.

தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மகா கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கும் செந்திலுக்கும் ஏற்கனவே ஒரு ஜோடி பொருத்தம் இருப்பதால் தான் செந்தில் நடித்து ஹிட்டான சரவணன் மீனாட்சி சீரியலில் இரண்டாம் பாகத்தில் தொடங்கி மூன்று பக்கத்திற்கு இவரே கதாநாயகியாக நடித்தார்.

ரசிகர்களை மேலும் கவர உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான ரக்சிதா. தனது அசத்தல் புகைப்படங்களை இன்ஸ்டாம்கிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை நிலை குலைய வைத்துள்ளார். சமீபத்தில் பளபளக்கும் சிவப்பு நிற பட்டுப்புடவையில், கழுத்து நிறைய தங்க நகைகளுடன் கோவில் சிலை போல போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here