பணத்தாசையால் நயன்தாரா எடுத்த விபரீத முடிவு.., கடைசியில் எல்லாமே கேள்விக்குறி தான்!!

0
பணத்தாசையால் நயன்தாரா எடுத்த விபரீத முடிவு.., கடைசியில் எல்லாமே கேள்விக்குறி தான்!!
பணத்தாசையால் நயன்தாரா எடுத்த விபரீத முடிவு.., கடைசியில் எல்லாமே கேள்விக்குறி தான்!!

தமிழ் சினிமாவில் 2004 ஆம் ஆண்டு “ஐயா” படத்தின் மூலம் அறிமுகமாகிய நயன்தாரா, பின் சந்திரமுகி படத்தில் தென்னிந்திய சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். பின்பு பல ஹிட் படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்துவரும் நயன்தாரா, ஒரு புதிய அவதாரம் எடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து, தனக்கென ஒரு சகாப்தத்தை உருவாக்கி, “லேடி சூப்பர் ஸ்டார்” என மக்களிடையே பெரும் செல்வாக்கை பெற்றவர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

“நானும் ரௌடி தான்” என்ற படத்தில் மூலம் இணைந்த நயன் மற்றும் விக்கி 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 9 அன்று இருவருக்கும் திருமணம் நடந்ததை அடுத்து, இனி நயன் எந்த படங்களிலும் இணைய போவதில்லை என்ற செய்தி வெளியாகியிருந்தது. இவர்களின் திருமணத்திற்கு முன்பே அட்லி இயக்கத்தில் ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் “ஜவான்” படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளதால், தனது தாய்லாந்து ஹனிமூனை முடித்த கையோடு ஜவான் படப்பிடிப்பில் இறங்கியுள்ளார்.

நயன்தாராவின் பிறந்தநாள் அன்று விக்கி நயனின் அடுத்த படம் குறித்த அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். விக்கியின் இயக்கத்தில் NT81 படத்தில் நயன் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் கே.ஜி.எப் தயாரிப்பாளருடன் ஒரு படத்தில் கைகோர்த்துள்ளார் நயன்.

பிக் பாஸில் வந்த மொழி பிரச்சனை? விக்ரமன் ஜனனியால் நெருக்கடி!

மேலும் கனெக்ட் , ஏகே 62, NT81, ஆட்டோ ஜானி, என நயன்தாரா கமிட்டான படங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. ஆனால் நயன்தாராக்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ளத்தான் நேரம் வேண்டும் என்று ஒரு கருத்து இயக்குனர்களிடம் இருந்துவருகிறது. தனக்கு வரும் படவாய்ப்புகளை தொடர்ந்து ஓகே செய்துவரும் நயன், இதற்கு காரணம் வாய்ப்பு வரும்போது அதை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற மனப்பக்குவத்தில் நயன்தாரா உள்ளார் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here