விஜய் டிவிக்கு Bye சொல்லிட்டு கிளம்பிய சீரியல் நடிகை.., அடுத்து என்ன செய்ய போறாங்க தெரியுமா??

0
விஜய் டிவிக்கு Bye சொல்லிட்டு கிளம்பிய சீரியல் நடிகை.., அடுத்து என்ன செய்ய போறாங்க தெரியுமா??
விஜய் டிவிக்கு Bye சொல்லிட்டு கிளம்பிய சீரியல் நடிகை.., அடுத்து என்ன செய்ய போறாங்க தெரியுமா??

விஜய் டிவியில் மதியம் 2.30 மணிக்கு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி பல இல்லத்தரசிகளின் பேவரட்டாக உள்ள சீரியல் தான் “நம்ம வீடு பொண்ணு”. இந்த சீரியலின் ஹீரோயினான மீனாட்சிக்கும் அவரது கணவர் சரவணனுக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அவங்க ரெண்டு பேருக்கும் இடையே உள்ள ஈகோ காரணத்தினால் தங்களுக்குள் உள்ள காதலை வெளிப்படுத்த மறுக்கிறார்கள்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சரவணன் மீனாட்சியை சேர்த்து வைப்பதற்காக, மீனாட்சியின் தோழி ஜீவப்பிரியா, ஜீவா என்ற பெயரில் ஆண் போல வேடமிட்டு வீட்டிற்குள் என்ட்ரி கொடுக்கிறார். இவர் மீனாட்சியின் மீது சரவணனுக்கு உள்ள காதலை சரவணன் ஒத்துக் கொள்வதற்காக பல டெஸ்டுகளை வைக்கிறார். ஜீவாவின் பல முயற்சிகளுக்கு பிறகு சரவணன் மற்றும் மீனாட்சி தங்களது காதலை வெளிப்படுத்துகின்றனர்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜி.பி.முத்து.., சொந்த தம்பியே செய்த வெறிச்செயல்!!

இப்படி சீரியல் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் நேரத்தில் சீரியலை விட்டு ஜீவப்பிரியா கேரக்டரில் நடித்த யமுனா விலக போவதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் இவர் வேறு சீரியலில் கமிட் ஆகி விட்டார் என்ற ஒரு பேச்சும் மக்களிடையே பரவி வருகிறது. மேலும் இவர் வேறு சீரியலில் நடிக்க கமிட்டாகி உள்ளார் என்ற தகவலும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here