ஆலியா நடிக்கும் புது சீரியலில் ஏற்பட்ட சிக்கல்.., சன் டிவி போட்ட மாஸ்டர் பிளான்.., அப்போ விஜய் டிவிக்கு ஆப்பு தான்!!

0

சின்னத்திரை நடிகையான ஆலியா மானசா சில நாட்களுக்கு முன்பு தான் புதிய தொடரில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தது. ஆனால் அந்த சீரியல் எந்த சேனனில் ஒளிபரப்பாகும் என்ற தகவலை ஆலியா மானசா எதிலும் வெளியிடாமல் இருந்தார். இப்படி இருக்கையில் அவர் நடிக்கும் புதிய சீரியலுக்கான ப்ரோமோ சன்டிவியில் ஒளிபரப்பானது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன்படி தான் அவர் நடிக்கும் சீரியலின் பெயர் இனியா என்று தெரியவந்தது. மேலும் சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ரோஜா சீரியலுக்கு பதிலாக இனியா சீரியல் ஒளிபரப்பப்படும் என்று அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இந்த சீரியலின் நேரம் மாற்றபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது விஜய் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இப்போது விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் இனியா சீரியலை ஒளிபரப்பினால் TRB யில் சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த விஷயங்களை யோசிச்சு தான் சன் டிவி இப்போது இனியா சீரியலை நிறுத்தி வைத்துள்ளதாம். இதனால் இனியா சீரியல் அடுத்து எப்பொழுது ஒளிபரப்பாகும் என்பது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here